Saturday, February 16, 2008

வாழ்க்கை




சொகுசாய் உட்கார "portable chair"


புரட்ட்டிப் புரட்டிப் படிக்க "variety novels"


பிறந்த நாளுக்கு கிடைத்த "b'day cards"


துரு துரு என முழிக்கும் "Teddy bear"


எட்டி உதைக்கும் "football"


என்னகுப் பிடித்தமான "family photo"


புளித்துப் போன "special burger"


தாகத்தை தணிக்க "water bottle"


சுடச் சுட "cappuccino"


வேண்டியதெல்லாம் வைக்க "cup-board"


இன்னும் பல பல பொருட்கள்


இருக்கும் இடம் எது தெரியுமா


ஆம் அது என் "cubicle"


இப்பொழுதெல்லாம் அங்கு தன் நன் வாழ்கிறேன்!!!


வீட்டில் படுக்கை மட்டும்


எப்பொழுதாவது உறங்க!!!

Saturday, January 5, 2008

கேள்விக் குறி



நாட்கள் பல கடந்தன

வேலைகள் பல மாறின

புத்தம் புது நண்பர்கள்

புத்தம் புது மனிதர்கள்

பல வித மாறுபாடுகள் வாழ்வில்

ஆனால் மாறாத ஒன்று

இந்த அடிமைத் தனமான தொழில்

காலை மாலை நேரம் தெரியாமல்

அனுப்புவார்கள் மெயில் மெயில் என்று

அவசர வேலை கஸ்டமர் சப்போர்ட்

பல வித பெயர்களை வைத்து மாறி

மாறி வேலை வாங்குகிறார்கள்

எப்பொழுது தான் ஒரு நல்ல விடிவு கிடைக்குமோ ???
பின் குறிப்பு -- இது ஒரு உண்மைச் சம்பவம் :-)