Saturday, December 29, 2007

பள்ளிக்கூடம்

அம்மா எட்டு மணி ஆச்சு
சூ எங்க சாக்ஸ் எங்க
டிபன் பாக்ஸ் எங்க
ஐயோ டை எங்க
ஆட்டோ வந்துரும்மா
ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு
அம்மா எடுத்துட்டு வாம்மா
மிஸ் திட்டுவாங்க...
மிஸ் திட்டுவாங்க...
என்று உளறிக் கொண்டே இருந்த சிறுமியை
அதட்டி எழுப்பி அவள் தாய் கூறினால்
விறு விறுனு எழுந்துரிச்சு போய்
பண்ட பாத்திரம் தேய் முதலாளி
அம்மா திட்ட போறாங்க அவங்க புள்ளைக்கு
ஸ்கூலுக்கு நேரமாச்சம்மா!!!!

Wednesday, December 26, 2007

மேகம்


மேகக் கூட்டங்களே
பூமியின் அழகைப் பார்த்து
வெட்கத்தால் நாணி நிற்கும்
நிலவின் முகத்தை மறைக்கவா
இவ்வளவு வேகமாகப் போகின்றிர்கள் ???

Wednesday, December 19, 2007

மறதி

காலை ஆறு மணி, அலாரம் அடிக்கிறது
அவசரமாக எழுந்து, சோம்பல் முறித்து
பல் தேய்த்து, குளித்து முடித்து
காலில் இரக்கை கட்டிக் கொண்டு
பேருந்து நிலையம் போனால் கூட்டம் இல்லை,
பேருந்திலும் கூட்டம் இல்லை,
யோசித்துக் கொண்டிருந்தேன் அலுவலகம் வந்தது
அங்கும் கூட்டம் இல்லை
பின்பு தான் புறிந்தது அன்று விடுமுறை என்று :-)

இந்த இயந்திர வாழ்வில் நாட்கள் கூட மறந்து போகும் :-(

Monday, December 17, 2007




தொடக்கம் என்பது வாழ்வில் முக்கியமான ஒன்று...


அருவிக்கு நீர்த்துளி ஒரு தொடக்கம்

அறிவுப்பசிக்கு ஆவன்னா ஒரு தொடக்கம்

மரத்திற்கு விதை ஒரு தொடக்கம்

மனிதத்துக்கு மனதில் ஈரம் ஒரு தொடக்கம்...


அது போல் என் பயணத்துக்கு இந்த தொடக்கமே ஒரு தொடக்கம்!!!