Saturday, December 29, 2007

பள்ளிக்கூடம்

அம்மா எட்டு மணி ஆச்சு
சூ எங்க சாக்ஸ் எங்க
டிபன் பாக்ஸ் எங்க
ஐயோ டை எங்க
ஆட்டோ வந்துரும்மா
ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு
அம்மா எடுத்துட்டு வாம்மா
மிஸ் திட்டுவாங்க...
மிஸ் திட்டுவாங்க...
என்று உளறிக் கொண்டே இருந்த சிறுமியை
அதட்டி எழுப்பி அவள் தாய் கூறினால்
விறு விறுனு எழுந்துரிச்சு போய்
பண்ட பாத்திரம் தேய் முதலாளி
அம்மா திட்ட போறாங்க அவங்க புள்ளைக்கு
ஸ்கூலுக்கு நேரமாச்சம்மா!!!!

1 comment:

Anonymous said...

அருமை